
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி படம் எடுக்கிறார் என்று செய்திகள் வந்தது முதல் அந்தப்படம் LCUவில் வருகிறது, இது ஒரு டைம் டிராவல் படம் என்று ஆளாளுக்கு அளந்து விட்டு வந்தார்கள். கடைசியில் இது எல்லாம் இல்லாமல் போகவே, ரசிகர்கள் எதிர்பார்த்த சினிமா இல்லாமல் போனதில் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனால்தான் கூலி படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை செய்து வந்தனர்.
லோகேஷ் கனகராஜை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள். அவருக்கு மார்க்கெட் போச்சு, அடுத்த படம் கைதி -2வுக்கு பேசியபடி 75 கோடி ரூபாய் கொடுக்க மாட்டார்கள். கெட்டதுக்கு பாதியாக குறைத்துதான் கொடுப்பார்கள் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இத்தனை நாளும் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்த லோகேஷ் கனகராஜ், நேற்று வெடித்திருக்கிறார்.
கோவையில் நேற்று நடந்த விழாவில் பேசியபோது, எதிர்பார்ப்புகளால் ஏமாற்ற மடைந்த ரசிகர்கள் குறித்த கேள்விக்கு, ’’கூலி படத்தை பற்றி ஆரம்பத்தில் இருந்து நான் எதுவும் சொல்லவில்லை. இயல்பாகவே எதிர்பார்ப்பு கூடிவிட்டது. டைம் டிராவல், எல்.சி.யு. என்று எதிர்பார்ப்பு கூடிவிட்டது. அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி எல்லாம் என்னால் கதை எழுத முடியாது. நான் ஒரு கதை எழுதுவேன். அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் மகிழ்ச்சி. அது அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருந்தால் மகிழ்ச்சி. பிடிக்காவிட்டாலும் என் பயணம் தொடரும்’’ என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.
லோகேஷின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் அதிர்ந்துள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் படம் எடுக்க வேண்டும். ஆனால், மாறாக ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக கதை எழுத முடியாது என்று சொல்கிறாரே லோகி? ரசிகர்களுக்காக கதை எழுத முடியாது என்றால் பின்னே யாருக்காகத்தான் அவர் கதை எழுதுகிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.