
நானும் ரவுடிதான் படத்தின் மூலம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர். நீண்ட காலம் கழித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் பிரம்மாண்டமான திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு பல கோடிகளுக்கு விற்றார்கள். இதில்தான் சிக்கல் எழுந்தது.
தனது அனுமதி இல்லாமல் தான் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் இருந்து நயன்தாரா திருமண ஆல்பத்தில் காட்சிகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் தனுஷ். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது, நயன்தாரா திருமண ஆல்பத்தில் சந்திரமுகி படத்தில் இருந்து தங்கள் அனுமதி இல்லாமல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்திரமுகி படத்தின் காப்பிரைட் உரிமையை வைத்திருக்கும் ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
முறையாக முன் அனுமதி பெறாமல் முந்திரிக்கொட்டை மாதிரி விக்னேஷ் சிவன் இப்படிச்செய்து நயன்தாராவை தேவையில்லாத சிக்கலில் எல்லாம் சிக்க வைத்திருப்பதாக பலரும் சொல்லி வருகின்றனர்.
திருமணம் ஆல்பம் இத்தனை பிரச்சனையில் இருந்தாலும் வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகள் பெற்று அவர்கள் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’’குறைவான அறிவுடையவரை ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும். கணவர் செய்கின்ற தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்னை விட்டுவிடுங்கள். நான் ஏராளமான பிரச்சனைகளை உங்களால் அனுபவித்து விட்டேன்’’ என்று பதிவிட்டதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் அப்பதிவை நீக்கிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
விக்னேஷ் சிவனால் தான் வேதனைப்பட்டிருப்பதாக அந்த பதிவின் மூலம் நயன் சொல்ல நினைத்தாரா? விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்தன.
சிலர், நயன்தாரா அப்படி ஒரு பதிவைப்போடவே இல்லை. அவர் அப்படி பதிவிட்டதாக அவருக்கு வேண்டாத சிலர்தான் பரப்பி வருகின்றனர் என்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, அண்மைக்காலங்களில் கோயில் கோயிலாக கணவர், குழந்தைகளுடன் சென்று வழிபட்டு வருகிறார் நயன்தாரா. இதற்கு காரணம் ஒரு ஜோதிடர். அவர் நயன்தாராவின் நிழல் போலவே அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சென்று வருகிறார்.

அஜித்குமார் விபத்தில் சிக்கப்போகிறார் என்று சொல்லி இருந்தேன். அது நடந்தது. அது மாதிரி பலருக்கு தான் சொன்னது பலித்தது என்றும், நயன்தாரா ஒரு வழக்கில் சிக்கப்போகிறார் என்று அந்த ஜோதிடம் சமூக வலைத்தளத்தில் சொன்னதாகவும், அவர் சொன்னது மாதிரியே ‘சந்திரமுகி’ பட வழக்கு வந்திருப்பதால் அந்த ஜோதிடரை சந்தித்து அவர் சொன்னபடியேதான் நயன்தாரா கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகிறார் என்கிறார்கள்.
சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, விக்னேஷ்சிவன் – நயன்தாரா விவாகரத்து நடந்துவிடக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.