அதிகாரப்பூர்வ பாமக எது? என்பது தெரியாத சிக்கல் நீடிக்கும் நிலையில், அன்புமணியை புறக்கணித்திருக்கிறார்கள் பழனிசாமியும் விஜயும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை சென்னையில் போராட்டம் நடத்துகிறார் அன்புமணி. திமுக தவிர்த்து அதிமுக, தவெக, அமமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளூக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அன்புமணி.
அன்புமணி சார்பில் வழக்கறிஞர் பாலு, பழனிசாமியை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அதிமுக இந்த போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்கிறார்கள். தந்தை – மகன் போட்டியில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பத்தில் பழனிசாமி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

அதே நேரம், பழனிசாமியின் ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நீதிமன்றம் இதை ரத்து செய்துவிட்டது.இந்த நிலையில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் போராட்டம் என்பதால்தான் பழனிசாமி பங்கேற்க விரும்பவில்லை என்கிறார்கள்.
தவெக இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கான சரியான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை. தந்தை – மகன் குழப்பம் விஜய்க்கு ஒரு தடையாக இருக்க வாய்ப்பில்லை. ஈரோட்டில் நாளை மறுதினம் தனது மக்கள் சந்திப்புக்காக ஏற்பாடுகள் தீவிரமாக இருக்கும் நேரத்தில் அன்புமணியின் போராட்டத்தில் விஜய் மட்டுமல்ல மற்ற நிர்வாகிகளும் பங்கேற்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் பங்கேற்வில்லை என்கிறார்கள்.
