
ஒரு காலத்தில் ஜெயலலிதா,சச்சின் போன்றோர் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க மணிக்கணக்கில் காத்திருந்தார்கள். இப்போதும் புகழ் குறையாமல் உள்ளார் ரஹ்மான். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே ஐயர்கண்டிகை கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்குச் சென்று அங்கே ரஹ்மானை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்டுள்ளது.
மத்திய அரசுக்காக இந்திய கலாச்சாரம் தொடர்பான சத்யம், சிவம்,சுந்தரம் எனும் குறும்படத்திற்கு இசையமைத்துக் கொடுத்ததற்காக ரஹ்மானுக்கு நன்றி சொல்ல அமைச்சர் சென்றதாக தகவல்.
மத்திய அரசின் குறும்படத்திற்கு இசை அமைத்துக் கொடுத்ததால் மத்திய அமைச்சர் என்கிற முறையில் நன்றி சொல்லவே ரஹ்மானை சந்தித்ததாக சொல்கிறார் எல்.முருகன். ஆனால் இந்த சந்திப்பை அரசியலாகவே பார்க்கின்றனர்.

பாஜகவில் குஷ்பு, நமீதா தொடங்கி நடிகைகள் மற்றும் நடிகர்கள், திரைக்கலைஞர்கள் அதிகம் உள்ளனர். இதில் கட்சியில் முக்கிய பதவியை எதிர்பார்த்து அதற்கான முயற்சிகளில் உள்ளார் குஷ்பு. இவராவது காங்கிரஸ், திமுக என்று இருந்து பாஜகவுக்கு வந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நடிகை மீனாவோ, கட்சியில் இன்னும் உறுப்பினர் ஆகாமலே பிரதமர், துணை ஜனாதிபதி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசி வருகிறார்.
பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் நடிகை மீனா பங்கேற்றது முதற்கொண்டே மீனாவுக்கு அப்படி ஏன் முக்கியத்துவம்? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மீனாவையும் எல்.முருகனையும் தொடர்புபடுத்தி பல செய்திகள் பரவுகின்றன. மீனாவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கப்போவதாகவும், அதற்கு எல்.முருகன் தான் காரணம் என்றும் பேச்சு இருக்கிறது.
இந்நிலையில் ரஹ்மானை எல்.முருகன், ரஹ்மானை சந்தித்திருப்பதால் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாயந்த சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.