தன்னைப்பார்க்க 7 மணி நேரம் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் நடுரோட்டில் காத்துக்கிடந்த வேலுச்சாமிபுரம் மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தபோது அவர்கள் பக்கம் நின்று ஆறுதல் கூற வேண்டிய விஜய், கொஞ்சம் கூட சமூக பொறுப்பற்ற தலைவராக இருந்து ஓடிச்சென்று ஒளிந்துகொண்டது பற்றி இயக்குநர் பார்த்திபனிடம் செய்தியாளார்கள் கேள்பி எழுப்பினர்.
அதற்கு பார்த்திபன், ‘’சினிமாவில் இருப்போருக்கு கண்டிப்பாக சமூகப்பொறுப்பு இருந்தே ஆகணும்.மக்கள்தான் நமக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுக்குறாங்க. என் அப்பா, அம்மா கஷடப்பட்டு எனக்கு சோறு போட்டிருந்தா கூட, புதிய பாதை மூலமா சொசைட்டியில எனக்கு பெரிய மரியாதைய ஏற்படுத்திக் கொடுத்தது இந்த சமூகம்.

அதனாலதான் இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னுதான் ‘பார்த்திபன் மனித நேய மன்றம்’ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு ’சோத்துக்கட்சி’ன்னு ஆரம்பிச்சு, அத படமா ஆரம்பிச்சு அரசியல் வழியா ஏதாவது மக்களுக்கு செய்யலாமுன்னு பார்த்தா, அரசியல் போற போக்குல இங்க நிறைய வசதி தேவைப்படுது. பணம் தேவைப்படுது. மனசுக்குள்ள வீராப்பு இருக்குறவனால மட்டும் இங்க அரசியல் பண்ணிட முடியாது. அரசியல் வேற ஒரு களம். அது புரியாதுன்னு சொல்லியே புதைச்சு வச்சிக்கிட்டு இருக்கோம். இதை எல்லாம் உடைச்சிதான் எம்.ஜி.ஆர். வந்தார். இப்ப யார் வேணும்னாலும் வரட்டும். இப்படி சொல்றதால நான் ஆளுங்கட்சின்னு சொல்லுவாங்க. ஒரு பிரச்சனையை மேலும் கிளறிவிடுவதை விட அதுக்கு என்ன தீர்வுன்னுதான் யோசிக்கணும்’என்றார்’.

சோத்துக்கட்சியை அன்று கலைத்துவிட்டாலும் கூட, 2026ல் நான் தான் சி.எம்.’’ என்கிறார். அதாவது நான் தான் சி.எம். என்பது பார்த்திபன் இயக்கும் படம்.
இதற்காக, ‘’பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து!’’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
