
ஒரு வாரத்திற்கு மேல் டெல்லியில் முகாமிட்டு பாஜக மேலிடத்தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து, அவர்கள் மூலமாக 54 வழக்கறிஞர்களை வைத்து, தான் நினைத்ததை சாதித்து காட்டி உள்ளார் ஆதவ் அர்ஜூனா. ஆனால், இவரால் சிபிஐயிடம் வசமாக சிக்கி இருக்கிறார் விஜய் என்கிறது உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரம்.
கடந்த 27ம் தேதி அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது, 10 ஆயிரம் பேர்தான் கூட்டத்திற்கு வருவார்கள் என்று சொல்லி போலீசாரிடம் அனுமதி பெற்றுவிட்டு, பல ஊர்களில் இருந்தும் டெம்போவில் ஆட்களை திரட்டி வந்து கூட்டத்தை அதிகரித்தது, பல மணி நேரம் கூட்டத்தினரை காக்க வைத்தது, அக்கூட்டத்தினருக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்காதது, கூட்ட நெரிசல் மிகுதியால் திட்டமிட்ட பகுதிக்கு முன்னரே விஜயை பேசச்சொல்லி போலீசார் அறிவுறுத்தியும் அதில் வாங்காத தவெக நிர்வாகிகள் என்பன உள்பட இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு வகையிலும் காரணமாக இருக்கிறது தவெக என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், சம்பவத்திற்கு பொறுப்பேற்று தவெக மன்னிப்பு கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களிடையே வருத்தம் கூட இதுவரையிலும் தெரிவிக்கவில்லை.

சம்பவம் நடந்ததுமே தவெகவின் தலைவர் விஜய்யும் கட்சியின் முக்கிய தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் தப்பி ஓடினர்.
இந்த வழக்கில் தவெக மீது பல்வேறு தரப்பினரும் ஆத்திரத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்க, இதிலிருந்து விடுபட, தங்கள் தரப்பில் தவறு இல்லை என்று காட்டிக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி போராடியது தவெக. இதற்காக, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும், அகில இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவராருமான ஆதவ் அர்ஜூனா, டேராடூடினில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக செல்வதாக சொல்லிவிட்டு, டெல்லியில் முகாமிட்டார். அங்கே பாஜக மேலிடத்தலைவர்கள் மற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு தவெகவுக்கு சாதகமாக அமைய உதவும்படி மன்றாடினார் என்கிறது டெல்லி ஊடகவியலாளர்கள் வட்டாரம்.
கூட்டணிக்கணக்கில் பாஜக மேலிடமும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் 54 வழக்கறிஞர்களை தவெக சார்பில் வாதிட கொடுத்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரம்.

பாஜக மேலிடம், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தயவில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக அன்புமணி உள்ளிட்டோர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்று பேசி வருகின்றனர். இதன் மூலமே பாஜக, ஆர்.எஸ்.எஸ்., அதிமுக, தவெக கூட்டு முயற்சியில் சிபிஐ விசாரணையை பெற்றிருப்பது தெரியவருகிறது.
கரூர் சம்பவ வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது சிறப்பான வழக்கு அல்ல என்றும், இந்த சிபிஐ விசாரணையை ஒரு சிறப்புக்குழு விசாரிக்கு என்பதெல்லாம் மிகையாக தெரிகிறது என்று மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தவெகவினர். ஆனால், இதன் மூலம் சிபிஐயிடம் விஜயை சிக்க வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா என்கிறது வழக்கறிஞர்கள் வட்டாரம்.

சிபிஐ விசாரணை பெற வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்டோருக்கு தெரியாமல் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி உள்ளனர்.ன் மனைவி, மகனை கைவிட்டு தனியாக வாழும் பன்னீர்செல்வம் தவெகக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ளார் என மனைவி புகார் கூறி உள்ளார். அவர் காணொளி காட்சி மூலம் ஆஜராகி, குற்றம்சாட்டி உள்ளார். இதே போல் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடமும் அதிமுகவினர் போலி கையெழுத்து பெற்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதிமுவினர் கேட்டபோது விசயம் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன். இப்போது விபரம் தெரிந்துவிட்டது. அதனால் சிபிஐ விசாரணை கோரிய தனது மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சட்ட உதவி மையத்தில் ஆஜராகி மனு அளித்துள்ளார் செல்வராஜ்.

இது குறித்து சிபிஐ உரிய விசாரணை நடத்தும் என்று நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.
சிபிஐ விசாரணையில் இந்த மோசடிகள் உறுதியாகும் போது, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு ரத்தாகும் சூழல் உள்ளது. அது மட்டுமல்லாமல் கரூர் சம்பவ வழக்கு கிரிமினல் வழக்காகத்தான் விசாரிக்கப்படும் என்பதால், விஜய்க்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லி அதிமுகவும் ஆதவ் அர்ஜூனாவும் சேர்ந்து விஜயை சிபிஐயிடம் சிக்க வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.