பெரிய மிருகங்கள், கூர்மையான பற்கள், வேகமான வேட்டையாடிகள்…
அதுதான் பொதுவாக “மிகவும் ஆபத்தான விலங்குகள்” ( Most Dangerous Species )என்றால் நம் மனதில் தோன்றுவது.
சிங்கம், சுறா, ஓநாய் – இவை போன்ற உச்ச வேட்டையாடிகள்தான் மனிதர்களுக்கு மிகப் பெரிய ஆபத்துகள் என்று பெரும்பாலும் நாம் நினைப்போம்.
ஆனால் உண்மையில் பெரியதும் பலமுமாக இருப்பது ஆபத்துக்கு காரணமல்ல.
உலகின் உண்மையான கொலையாளிகள் பலர்… மிகச் சிறியவர்கள்!
சுறாக்கள் வருடத்திற்கு சராசரியாக 6 பேரை மட்டுமே கொல்கின்றன.
சிங்கங்கள்? வயது கடந்த 22 பேர் மட்டுமே.
ஆனால் கொல்லும் திறனால் உலகை நடுங்கவைக்கும் பல விலங்குகள் — நம் கண்ணில் படவே படாது !
இப்போது உலகின் மனிதர்களை அதிகம் கொல்லும் 10 ஆபத்தான விலங்குகளை பற்றி பார்ப்போம்.
- நீர்யானை (Hippopotamus) — வருடத்திற்கு 500 மரணங்கள்
ஆப்பிரிக்காவின் ஆபத்தான விலங்குகளில் முதல்வனாக சிங்கத்தைக் கருதுகிறோம். ஆனால் உண்மை?
மனிதர்களைப் அதிகம் கொல்வது… நீர்யானை.
மிகவும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டவை
தங்களின் பிரதேசத்தை யாரும் நெருங்க விடாது
படகுகளை நேரடியாக மோதிப் புரட்டிவிடும்
1,500 கிலோ எடை, கூர்மையான பற்கள் — எதிர்க்க முடியாத வலிமை
ஆப்பிரிக்காவில் வருடத்திற்கு சராசரியாக 500 பேர் நீர்யானையின் தாக்குதலால் உயிரிழக்கின்றனர்.
- யானைகள் — வருடத்திற்கு 500 மரணங்கள்
சாந்தம், கருணை, அறிவு யானைகளை இப்படித்தான் நாம் நினைக்கிறோம்.
ஆனால் மனிதர்கள் அவர்களின் வாழ்விடத்தை கைப்பற்றத் தொடங்கியதால், மோதல்கள் அதிகரித்தன.
விளைநிலங்களை நாசம் செய்யும், கிராமங்களைத் தாக்கும், கோபமடைந்தால் ஒரே அடியில் மனிதரை நசுக்கிவிடும். அதனால் வருடத்திற்கு 500 பேர் யானை தாக்குதலால் மரணிக்கிறார்கள்.
- உப்பு நீர் முதலை (Saltwater Crocodile) — 1,000 மரணங்கள்
உலகின் மிக ஆபத்தான ஊர்வனம் இது .
திடீர் தாக்குதல், நீரில் மறைந்து வேட்டையாடுதல், மனிதரை நோக்கி திட்டமிட்ட தாக்குதல் செய்வதில்லை ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் விடாது.
இவை வருடத்திற்கு சுமார் 1,000 பேரை கொல்கின்றன.
- ரவுண்ட் வார்ம்ஸ் (Ascaris) — 2,500 மரணங்கள்
இவை கண்களுக்கு தெரியாத அளவுக்கு சிறிய பராசிட்டிக் புழுக்கள்.
உணவு/நீரில் உள்ள முட்டைகள் மூலம் உடலில் நுழைந்து குடலுக்குள் வளர்ந்து நோய் ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் மரணம் மிக தீவிரமாக இருக்கும்.
இந்த புழுவால் ஏற்படும் நோய் அஸ்கேரியாசிஸ், வருடத்திற்கு 2,500 மரணங்கள்.
- தேள் — வருடத்திற்கு 2,600 மரணங்கள்
இதன் 25க்கும் மேற்பட்ட இனங்களின் விஷம் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தானது.
விரைவான நஞ்சுத்தாக்கு, பெரும்பாலும் செருப்புகள், படுக்கைகள், தரை பகுதிகளில் மறைந்து கிடக்கும்.
தங்களை காப்பாற்றி கொள்ளவே கொட்டும்
உலகளவில் வருடத்திற்கு 2,600 பேர் தேள் கடியால் உயிரிழக்கின்றனர்.
இந்திய ரெட் ஸ்கார்பியன் மிகவும் ஆபத்தானது .
- அசாசின் பூச்சி (Assassin Bugs) — 10,000 மரணங்கள்
துக்கத்திலுள்ள போது மனிதர்களின் முகத்தில் கடிப்பதற்காகவே பெயர் பெற்றவை இந்த கிஸ்ஸிங் பக்.
இவை பரப்பும் நோய்: Chagas Disease; இது வருடத்திற்கு உலகில் 10,000 பேரை கொல்லுகிறது.
- சா-ஸ்கேல்டு வய்ப்பர் (Saw-scaled Viper) — 138,000 மரணங்கள்
இது உலகின் அதிகமான மனிதர்களை கொல்வதில் பெயர் பெற்றது.
மிக வேகமான தாக்குதல், அதீத ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டவை.
அடர்த்தியான மக்கள்தொகை பகுதிகளில் வசிக்க கூடியவை. இந்த பாம்பு விஷத்தால் வருடத்திற்கு 138,000 பேர் மரணமடைகின்றனர்.
(குறிப்பு: உலகின் மிக விஷமுள்ள பாம்பு Inland Taipan, ஆனால் அது மனிதர்களை அரிதாகவே attack செய்கிறது.)
- குடிநீர் நத்தை (Freshwater Snails) — 200,000 மரணங்கள்
நம்ப முடியாத விஷயம் — நத்தை!
இதன் உடலில் வளரும் பராசிட்டிக் ஃப்லூக் (Schistosoma) தான் உண்மையான கொல்லி.
மனிதர்கள் மாசான நீரில் காலடி வைக்கும்போது
பராசைட் தோலினூடாக உடலுக்குள் நுழைந்து உயிருக்கு ஆபத்தான ‘Schistosomiasis’ என்ற நோயை வரவைக்கிறது. இதனை நத்தை காய்ச்சல் எனவும் கூறுவர்.
WHO கணக்கின் படி ஆண்டுதோறும் 200,000 மரணங்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றது.
- மனிதர்கள் — 431,000 மரணங்கள்
ஆம்! உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் இரண்டாம் இடம் மனிதர்களுக்கே.
கொலைகள், போர்கள், ஆயுதங்களின் கண்டுபிடிப்பு, ஒருவருக்கொருவர் ஏற்படுத்தும் அழிவு என
மனிதர்களால் மனிதர்கள் வருடத்திற்கு 431,000 மரணமடைகிறார்கள்.
மேலும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றம், மாசு, உணவுக் குறைபாடு, நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.
- கொசு — 7.25 லட்சம் முதல் 10 லட்சம் மரணங்கள்
உலகின் எண் 1 கொலையாளி ஒரு சிறிய கொசு!
கொசுக்கள் நேரடியாக கொல்லாது; ஆனால் இவை மிகப்பெரிய நோய் பரப்பு கருவிகள்.
மலேரியா, டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா, வெஸ்ட் நைல் வைரஸ் என பல நோய்கள் ஏற்படுத்தும்.
சிறப்பாக பெண் Anopheles கொசு பரப்பும் மலேரியா மட்டும் வருடத்திற்கு 6–7 இலட்சம் மனிதர்களை கொல்கிறது.
கொசுக்கள் மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும்
7.25 லட்சம் முதல் 10 லட்சம் மனிதர்களை கொல்கின்றன. இது உலகின் எந்த ஒரு பெரிய விலங்காலும் கூட முடியாத ஒன்று.
மிக ஆபத்தானவை பெரியவை அல்ல, சிறியவையே!
வலிமை, பற்கள், அளவு ஒன்றும் முக்கியமில்லை. பல நேரங்களில் மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினங்கள் மிகச் சிறியவை.
சுறா, சிங்கம் போன்றவை நம்மை அச்சுறுத்தும் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே ஆபத்தானவை. ஆனால் நத்தைகள், புழுக்கள், பூச்சிகள், கொசுக்கள் மற்றும் மனிதர்களுக்கு மனிதர்களே நிஜ வாழ்க்கையில் கொலையாளிகள்!
