பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi, அடுத்த மாதம் இந்தியாவில் Xiaomi 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதை உறுதி செய்துள்ளது
Xiaomi 14 ஃபோன்களை வருகிற மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக Xiaomi நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் Xiaomi 14 Pro மற்றும் 14 Ultra ரக ஃபோன்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் Xiaomi 14 ரக ஃபோன்கள் மட்டும் அறிமுகம் செய்ய Xiaomi நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Xiaomi 14 ஃபோன்கள், 6.36-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate மற்றும் IP68 நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு (Water-and-dust-resistant) சான்றிதழுடன் வருகிறது.
12GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் மற்றும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8 Gen 3 octa-core Processor-உடன் Xiaomi 14 ஃபோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
90W வயர்டு(Wired) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ்(Wireless) சார்ஜிங் திறன் கொண்ட 4,610mAh பேட்டரியை, இந்த ஸ்மார்ட்ஃபோன் கொண்டுள்ளது.
Leica நிறுவனத் தயாரிப்பில் (Summilux லென்ஸ் மற்றும் OIS: ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன்) 50MP மெயின் கேமராவும், 50MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் உடன் “ட்ரிபிள் ரியர் கேமரா” வசதியோடு வருகிறது.
செல்பிகள் மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு ஏற்றவாறு 32MP ஃப்ரண்ட் கேமரா வசதியுடன், இதுதவிர LED பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை இந்த Xiaomi போன் கொண்டுள்ளது.
மேலும் USB டைப்-சி போர்ட், GPS, Wifi உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டு இந்த Xiaomi போன் அறிமுகமாகிறது.
Xiaomi 14 ஸ்மார்ட்ஃபோனின் 8GB RAM/256GB ஸ்டோரேஜ் அடிப்படை மாடலின் விலை சுமார் 50,000 ரூபாய் ஆகவும், அதே சமயம் டாப் மாடலின் விலை 60,000 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Follow “Spark Media” channel on WhatsApp