
பானிபூரி விற்ற சிறுவன் முதல் இந்திய அணியின் ஸ்டார் வரை — இது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் உந்துதல் நிறைந்த பயணம் தான் இது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெருமையாக விளங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒருநாளில் உயரம் அடைந்தவர் அல்ல. பனிபூரி விற்றதும், குடிசைளில் தங்கியதும் போன்ற கஷ்டங்களை தாண்டியே அவர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பிறந்த Yashasvi Jaiswal, 23-வது வயதில் இந்திய A அணிக்காக இரட்டை சதம் அடித்த சிறுவயது வீரர் என்ற பெருமையை 2019-இல் பெற்றார். பின்னர் IPL-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
இவர் தனது ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்களை இப்போது விவரித்துள்ளார். கிரிக்கெட் கனவை தொடர்ந்து, மும்பையில் வாழ்ந்த போது அவரிடம் தங்க இடமே இல்லை. ஒரு இடத்தில் தங்க முடியாமல் தந்தை வீட்டைவிட்டு வெளியேறிய அவர், ஒருபோதும் தன் கனவையே விட்டுவிடவில்லை.

“என் மாமாவுடன் சிறுது நாட்கள் இருந்தேன். பிறகு, ஒரு cricket கிளப்பில் வாய்ப்பு கிடைத்தது. அங்கே நன்றாக விளையாடியதால், அவர்கள் எனக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தந்தார்கள்,” என்று யஷஸ்வி கூறியுள்ளார். இங்கு வருவதற்கு முன்பு தான் இப்போது உள்ள, அதே கிளப்புக்காக பானிபூரி விற்றதும், அங்குள்ளவர்களுக்காக சமைத்ததும், அவர்களுக்கு உதவியதையும் பகிர்ந்துள்ளார்.
பயிற்சி முடிந்து வந்த பின் கூட, செலவுக்கு பணம் வேண்டியதால், சின்னசின்ன வேலைகளைத் தேடி செய்துள்ளார். “அவர்கள் என் குடும்பம் போல ஆனார்கள். சமைத்து கொடுத்தேன், வேலை செய்தேன், அதற்கேற்ப சிறிது சம்பளமும் கிடைத்தது,” என அவர் சிரிப்புடன் கூறியுள்ளார்.

அவர் அதிகம் பேசும் மற்றொரு விஷயம் – மனோநிலை கட்டுப்பாடு. “எனக்குள் அதிக கோபம் இருக்கும். ஆனால், அந்தக் கோபத்தில் நான் அழிந்து விடக் கூடாது. என் அணிக்கு என்ன முக்கியமோ அதைத்தான் முன்னிலைப்படுத்துவேன்” என கூறியுள்ளார். “நான் கண்ணாடியில் என்னோடு தினமும் பேசுவேன். என் வெற்றிகளைக் கொண்டாடி, தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்வேன்,” என அவர் கூறுவது, அவர் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி நோக்கிச் செல்லும் மனிதர் என்பதற்கான சான்றாகும்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை நமக்கு சொல்லி தருவது, கடுமையான உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் எந்த கனவும் reachable என்பதற்கான நிஜமான எடுத்துக்காட்டாக அமைகிறது.