
பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகளை எல்லாம் சேர்த்துதான் 2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணியை அமைக்கப்போவதாக சொல்லி இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த மெகா கூட்டணி இப்போது கூடிவரும் நிலையில் இருக்கிறது என்கிறார்கள்.
பலம் வாய்ந்த கூட்டணி அமைய வேண்டும். இதற்காக விஜய் எல்லாம் வரவேண்டும் என்று தமிழிசை உள்ளிட்ட பலரும் மீடியாக்கள் மூலமாக சொல்லி வந்தனர். அதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மீடியாக்கள் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். தன் அழைப்புக்கு விஜய்யிடம் இருந்து பதில் வரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தவெக வைத்த சில நிபந்தனைகளால் அதிமுக – தவெக கூட்டணி கூடாமல் போனது. ஆனால் இந்தமுறை நடைபெறும் பேச்சு வார்த்தையில் அது கூடிவிடும் என்கிறார்கள். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி சமூகத்தைச் சேர்ந்த அருண்ராஜ்தான் தவெக சார்பில் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
இந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று தெரிந்துதான் விஜய்யிடம் இருந்து பதில் வரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் நயினார்.

இதையொட்டியே விரைவில் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார் விஜய் என்றும் தகவல் பரவுகிறது.
மாநிலங்களவை சீட் இப்போது அதிமுக கொடுக்காவிட்டாலும் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவில் இல்லை தேமுதிக. அதற்கு காரணம் பாஜக என்கிறார்கள். அதே போல் பாமகவும் கூட்டணியில் இருப்பதை பாஜக உறுதி செய்துவிட்டது என்கிறார்கள்.