
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு மோசடிகளை பாஜக அரங்கேற்ரி இருப்பதாகவும், அதே யுக்தியை பீகார் தேர்தலிலும் பாஜக மேற்கொள்ள இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையர் நியமன, கடைசி ஒரு மணிநேர வாக்குப்பதிவின் போது அதிக அளவில் வாக்கு பதிவானது, ஒட்டு மொத்தமாக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என பாஜக செய்த பல மோசடிகளை அடுக்கியுள்ளார்.
1. தேர்தல் ஆணையர் நியமன:
தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலிஅமை நீதிபதியும் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தது. அதை மாற்றும் வகையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு திருத்தங்களை செய்தது.
அதன்படி, நியமன குழுவில் பிரதமர், அவரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெறுவர். இதில் 2:1 என்ற கணக்கில் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார். இந்த குழுவில் உள்ள எதிர் கட்சி தலைவரின் வாக்கு செல்வாக்கு இன்றி இருப்பதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்த போதே காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இப்படி நடுநிலையாக இருந்த நீதிமதியின் பிரதிநிதித்துவத்தை நீக்கிவிட்டு, பாஜக தங்களுக்கு சாதகமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
2. போலி வாக்காளர்கள்:
தேர்தல் ஆணைய தரவுகளின்படி 2019 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.98 கோடி. இதுவே அடுத்த 5 ஆண்டுகள் கழித்து நடந்த 2024 மக்களவை தேர்தலில் போது 9.29 கோடியாக அதிகரித்தது.
ஆனால், அடுத்த 5 மாதத்தில் 2024 சட்டப்பேரவை தேர்தலின் போது இந்த எண்ணிக்கை திடீரென 9.70 கோடியாக அதிகரித்தது. 5 ஆண்டுகளில் 31 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்த நிலையில், 5 மாதத்தில் 41 வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி?
மேலும் இதில் அடுத்த வேடிக்கை என்னவென்றால், மகாராஷ்டிரா அரசால் 18 வயதுக்கு மேற்பட்டோர் என கூறப்பட்ட 9.54 கோடியை காட்டிலும் வாக்காளர்கள் எண்ணிகை 9.70 கோடியாக இருந்ததுதான்.
3. வாக்குப் பதிவில் முறைகேடு:
கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று கடைசி நேரத்தில், அதிகப்படியான வாக்களர்கள் வந்ததாக எந்த செய்தியும் இல்லை. எப்போதும் போல இயல்பான வாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றது.
அப்படி இருக்கையில், மாலை 5 மணி நிலவரப்படி 58.22 சதவீதம் பதிவான வாக்குப்பதிவு, மறுநாள் காலை அறிவித்த இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 66.05 ஆக அதிகரித்தது சந்தேகத்தை எழுப்புகிறது. கிட்டத்தட்ட இது 76 லட்ச வாக்காளர்களை கொண்டது. கடந்த கால மகாராஷ்டிரா தேர்தல்களில் இத்தகைய பெரிய வித்தியாசங்கள் இருந்தது கிடையாது.

4. குறிவைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள்:
மகாராஷ்டிராவில் சுமார் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 85 தொகுதிகளுக்கு உட்பட்ட 12,000 வாக்குச்சாவடிகள் குறிவைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மோசமான நிலையில் இருந்த குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பிறகு சராசரியாக ஒரு வாக்குச்சாவடியில் 600 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒருவர் வாக்குப்பதிய ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, குறைந்தது 10 மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். ஆனால், இவை ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளது.
ஐந்து மாதம் முன்னர் நடந்த மக்களவை தேர்தலில் 32 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளில் நடந்த அசாதாரண வாக்குப்பதிவால், சட்டமன்றத் தேர்தலில் 89 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதாவது, போட்டியிட்ட 149 தொகுதியில் 132 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.
5. ஆதாரங்களை மறைப்பது:
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களை போக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுங்கள் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இத்தகைய மேசடியை வரவுள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக முன்னெடுக்க உள்ளது. இம்மாதிரியான முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Oh my goodness! Incredible article dude! Thank you, However I am experiencing issues with your RSS.
I don’t know why I can’t subscribe to it. Is there anybody else having
the same RSS problems? Anyone who knows the answer can you kindly respond?
Thanks!!