சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பராசக்தி (Parasakthi). 1965இல் நடந்த உண்மைச் சம்பவமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த விபரம் வெளியானது.
பராசக்திபடத்தில் ‘தீ பரவட்டும்’ என்று இடம்பெற்றுள்ள இடங்களில் எல்லாம் நீதி பரவட்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தீக்குளிப்பு இடம்பெறும் காட்சிகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது

இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘இந்தி கத்துக்கிட்டு’ என்ற வசனம் (Mute) செய்யப்பட்டுள்ளது.

‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கம் மற்றும் இப்பெயர் கொண்ட உருவபொம்மை எரிக்கும் காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் சில முக்கிய காட்சிகளில் ‘தேச விரோதி’ என இடம்பெறும் வசனங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தபால் அலுவலக அறிவிப்புப் பலகையில் (Post office notice board) மாட்டுச் சாணம் தடவும் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையுடன் தாயையும் துப்பாக்கியால் சுடும் காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிற நாடுகளில் மொழித் திணிப்பால் ஏற்படும் சிதைவுகள் குறித்த குரல் பதிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

கிராமத்தில் நடக்கும் படுகொலை காட்சிகள் குறைப்பு, இறந்த உடல்களைக் காட்டுவது போன்ற காட்சிகள் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

“அதுவரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆளுகிறான்” என்ற வசனம் வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
