கொண்டாட்டம்தான் ரசிகர்களின் முக்கிய அடையாளம். ஆனால், இளையராஜா விழா என்றால் அதை தொலைத்துவிட வேண்டியதுதான். அப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு சென்றுவிடுவார்.
பேசும்போது விசிலடித்து, கைதட்டி, ஆர்ப்பரித்தால் கூட அத தவிர்த்துவிடச் சொல்லுவதில் பரவாயில்லை. இசைக்கச்சேரிகளில் பாடும்போது கூட விசிலடித்து ஆர்ப்பரிப்பதற்கு கடிவாளம் போட்டுவிடுவார் இளையராஜா.
இன்னொருமுறை விசிலடித்தால் பாடல் பாடுவதை நிறுத்திவிடுவேன் என்று அழுத்தமாகச் சொல்லிவிடுவார். வேறு வழியில்லை, பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்தும், உற்சாகத்தை வெளிப்படுத்த முடியாமல் மரக்கட்டை மாதிரி உட்கார்ந்து பாடலை கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். இளையராஜா விழாவில் அதுதான் ரசிகர்களுக்கு விதிக்கப்படும்.
பெரும்பாலான நடிகர்கள் தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்களுக்கு தங்களது ரசிகர் மன்றத்து ஆட்களை வரச்சொல்லிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட நடிகர் வந்து போகும் வரையிலும் அந்த ரசிர்கள் விசிலடித்து கைத்தட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தான் நடிகர் சூரி பங்கேற்கும் விழாக்களிலும் அவரின் ஊரில் இருந்தே ரசிர்கள் வந்து ஆர்ப்பரிப்பார்கள்.
விடுதலை -1 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் மேடையில் இளையராஜா பேசிக்கொண்டிருந்தபோது, சூரியின் ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்தனர். அதைப்பார்த்து கடுப்பாகிவிட்டார் இளையராஜா. நீ பேசாம இருக்குறதா இருந்தா நான் பேசுவேன். இல்லேன்னா மைக்கை கொடுத்துட்டு போயிடுவேன் என்று இளையராஜா கறார் காட்ட, வெற்றி மாறன் , சூரி உள்ளிட்டோர் மேடையில் இருந்தபடியே ரசிகர்களை நோக்கி சைகையால் அமைதியாக இருக்கச்சொன்னார்கள். அதன்பின்னரே இளையராஜா தொடந்து பேசினார்.
நேற்று சென்னையில் விடுதலை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் சூரியின் ரசிகர்களும் வந்திருந்தார்கள். படக்குழுவினர் வந்தது முதல் ரசிகர்கள் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருந்தார்கள். இதனால் சூரியை அழைத்து கலாய்த்தார் இளையராஜா. ‘’நான் வரும்போது ரசிகர்கள் அமைதியாக இருந்தாங்க. சூரி பேரை சொன்னா சத்தம் வரும்னு பார்த்தேன். இப்போதும் ஏன் அமைதியாவே இருக்குறாங்க?’என்று கேட்டார்.
அதற்கு சூரி, ‘’நீங்க இருக்குறீங்க அய்யா. அதான் அவுங்க சைலண்ட் ஆ இருக்குறாங்க’’ என்றூ சொல்லிவிட்டுச் சிரித்தார்.
கைத்தட்டுலும் , விசில் சத்தமும்தான் ரசிகர்களிடம் இருந்து நடிகர் எதிர்பார்க்கும் சொத்து. இளையராஜா விழாக்களுக்கு இந்த சம்பந்தமில்லாத ஒன்று.