தங்கம் இந்தியாவில் கலாச்சாரம், பாரம்பரியம், முதலீடு மற்றும் செல்வத்தின் அடையாளமாக உள்ளது.குறிப்பாக திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் தினசரி சேமிப்பு எனப் பலவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய குடும்பங்கள் மட்டும் பல டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருக்கிறார்கள். மேலும் நாட்டின் பொருளாதாரத்திலும் இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் ஏராளமான ஆறுகள் உள்ளன. அவை பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குறிப்பாக, விவசாயிகள் பாசனத்திற்காக அதனை நம்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்களது அன்றாட தேவைகளுக்காக நதிநீரை நம்பியுள்ளனர். மேலும் கங்கை, துர்கா, யமுனா, கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் விவசாயத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் முக்கியத்துவமாக உள்ளன.
இந்நிலையில், நதி நீரில் தங்கம் (Gold) பாய்ந்தால் எப்படி இருக்கும்? ஆம், சுபர்ணரேகா என்று அழைக்கப்படுகிற நதியில் தங்கம் கிடைக்கின்றன.
சுபர்ணரேகா நதியும், தங்கமும் !
சுபர்ணரேகா நதி (Subarnarekha River) இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பாயும் ஒரு முக்கியமான நதி ஆகும்.தொடர்ந்து, சுபர்ண என்ற சொல் தங்கத்தையும், ரேகா என்ற சொல் கோடு அல்லது வரியையும் குறிக்கிறது. தங்க வரிபோல் ஓடும் நதி என்பதே அதன் பெயரின் பொருள் என கூறப்படுகிறது.

நதியின் தோற்றமும் பயணமும்
இந்த நதி ஜார்கண்ட் மாநிலத்தின் சோட்டா நாக்பூர் பீடபூமியில் தோன்றி, மேற்கு வங்காளம் (West Bengal) மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேலும், சுமார் நானூறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை தன் நீரால் செழிக்கச் செய்கிறது.
சுபர்ணரேகா நதியும் தங்கமும்
இதனைத்தொடர்ந்து, பழங்காலத்தில் சுபர்ணரேகா நதியின் மணலில் சிறிய தங்கத் துகள்கள் காணப்பட்டன. தொடர்ந்து, நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் மணலை கழுவி தங்கத்தைப் பிரித்தெடுத்தனர். இதன் காரணமாகவே இந்த நதி தங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு, அதன் பெயரிலும் தங்கம் இடம் பெற்றது.

புவியியல் காரணங்கள்
சுபர்ணரேகா நதி பாயும் பகுதி கனிம வளங்கள் நிறைந்த நிலப்பரப்பாகும். இரும்புத் தாது, செம்பு, மைகா போன்ற கனிமங்கள் உள்ள பாறைகளின் அரிப்பினால் தங்கத் துகள்கள் நதியில் கலந்ததாகக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மழை மற்றும் நீரோட்டம் இந்த கனிமங்களை நதிக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம்
சுபர்ணரேகா நதி விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. நதிநீர் மூலம் நெல், காய்கறிகள் மற்றும் பல பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இதனால் இந்த நதி பாயும் பகுதிகளில் மனித வாழ்வும் பண்பாடும் செழித்து வளர்ந்தன.
இன்றைய நிலை
தொழில்துறை வளர்ச்சி, சுரங்கப் பணிகள் மற்றும் மாசுபாடு காரணமாக இன்றைய காலத்தில் நதியில் இருந்து தங்கம் கிடைப்பது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நதியின் நீர்தரமும் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும், இங்கு கிடைக்கப்படும் தங்கம் கண்ணனுக்கு தெரியாமல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
