பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் தமிழக அரசியல் களம் தகிக்கிறது. முக்கியத்தலைவர்கள் பலருக்கும் அச்சுறுத்தல் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
’’ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக்குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். அது இன்றைக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்து இதை திட்டமிட்டது யார்? இதை ஏவியது யார்? பொருள் உதவிகளைச் செய்தது யார்? என்பது வரைக்கும் காவல்துறை கண்டறிந்து தண்டிக்கும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’முக்கியத்தலைவர்கள் பலருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. உளவுத்துறை அதை எல்லாம் கண்டறிந்துயார் யாருக்கு பாதுகாப்பு தேவையோ, அந்த அடிப்படையில் உரியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.