தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அன்று நடைபெற இருப்பதாக தகவல்.
இந்த மாநாட்டில் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை முன்வைக்கிறார் தவெக தலைவர் விஜய். இதனால் அந்தக்கொடி எப்படி இருக்கும்? கொள்கைகள் என்ன? என்பதை அறிய தவெகவினர் ஆர்வமுடன் உள்ளனர்.
கட்சியின் கொள்கைத்லைவர்கள் என மூன்று பேர் என்பதை விஜய் முடிவெடுத் துள்ளதாகவும், அந்த மூன்று பேர் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் என்பதாகவும் தகவல் பரவுகிறது.
கட்சியின் கொடியை பொறுத்தவரையிலும் இரு வண்ணக்கொடி என்று முடிவாகி இருப்பதாக தகவல். அநேகமாக மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று தெரிகிறது. இல்லையே நீலம் – மஞ்சள் – கருஞ்சிவப்பு ஆகிய மூவண்ண நிறத்தில் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தவெக சார்பில் சென்னை திருவான்மியூரில் நடந்த கல்வி விருது விழாவில் பேசிய விஜய், மாணவர்கள் அனைவரும் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களை பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுத்தியது குறிப்பிடத்தக்கது.